உலகின் அதிவேக புகாட்டி காரை ஓட்டுவதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு!

Bugatti Veyron
உலகின் அதிவேகத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் கார் என்ற பெருமையை பெற்ற வேரான் காரை இந்திய வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான அரிய வாய்ப்பை புகாட்டி விரைவில் வழங்கவுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் துணை நிறுவனமான புகாட்டி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

கடந்த ஆண்டு புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்த வேரான் கார்தான் தற்போது உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில், புகாட்டி வேரான் சூப்பர் பாஸ்ட் காரை ரூ.16 கோடி விலையில் வோக்ஸ்வேகன் விற்பனை செய்து வருகிறது. இதனால், அந்த காரின் விற்பனை எதிர்பார்த்த அமையவில்லை.

இந்த நிலையில், புகாட்டி வேரான் சூப்பர் காரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக சில முக்கிய திட்டங்களை வோக்ஸ்வேகன் வகுத்துள்ளது.

புகாட்டி வேரோன் காரை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்க உள்ளது.

இந்தியாவிலும் வேரான் சூப்பர் பாஸ்ட் காரை தகுந்த வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை புகாட்டி வழங்குகிறது.

மேலும், புகாட்டி வேரான் காரை டெஸ்ட் டிரைவ் திட்டத்தை செயல்படுத்துவதற்காக புகாட்டியின் நிர்வாகி ஒருவரும் இந்தியா வர இருக்கிறார்.

முதலாவதாக மும்பையில் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், இத்தோடு நில்லாமல் புகாட்டி பிராண்டை பிரபலப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வேரான் சூப்பர் காரை ஓட்டிச்செல்லவும் புகாட்டி திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய புகாட்டி வேரான் கார் அதிகபட்சம் மணிக்கு 408 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 8.0 லிட்டர் எஞ்சின் வெறும் 2.6 நொடியில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2011, 10:30 [IST]
English summary
Indian Buyers will get Bugatti Veyron super car test drive soon. The world fast super fast car equipped with 8.0 liter engine and it can reach maximum 408 kmph.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+