வால்வோவின் எரிபொருள் சிக்கன போட்டியில் ஆந்திர டிரைவர் சாம்பியன்

Indian driver excells in Volvo's fuel economy challenge
பெங்களுர்: ஸ்வீடனில் வால்வோ டிரக்ஸ் நிறுவனம் நடத்திய ஆசிய அளவிலான எரிபொருள் சிக்கன போட்டியில் ஆந்திராவை சேர்ந்த டிரைவர் வெற்றி வாகை சூடினார்.

டிரக் நிறுவனங்களுக்கு லாபத்தை ஈட்டி தருவதற்கு அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் வால்வோ டிப்பர் லாரி ஓட்டும் டிரைவர்களுக்கு 'பியூவல் வாட்ச்' என்ற ஆசிய அளவிலான போட்டியை வால்வோ நிறுவனம் நடத்தியது.

இதற்கான தகுதி தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தானாபாத் நகரில் நடந்தது. இதில், மூன்று டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 14ந் தேதி ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் ஆசிய பியூவல் வாட்ச் போட்டியின் இறுதி போட்டி நடத்தப்பட்டது.

பல கடினமான சாலை சூழ்நிலைகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த டிரைவர்கள் கற்ற வித்தைகள் அனைத்தையும் காட்டி டிப்பர் லாரிகளை டிரைவர்கள் இயக்கினர்.

பரபரப்பாக நடந்து முடிந்த இந்த போட்டியில் அதிக எரிபொருள் தரும் வகையில் டிப்பர் லாரியை இயக்கி ஆந்திராவை சேர்ந்த கோசுலா வெங்கட சுரேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதையடுத்து, பெங்களுரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரசளிப்பு விழாவில் வால்வோவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் லார்ஸ் மார்ட்டின்சன் வெங்கட சுரேசுக்கு வெற்றி பெற்றதற்கான கோப்பையை வழங்கி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2011, 11:33 [IST]
English summary
Volvo organised a Asia fuelwatch competition to bring out the importance of the skils of a driver that plays critical role in driving high performance volvo tippers to achieve higher efficiency and productivity. The final round competition held in Sweden. Mr. Gosula venkata suresh, the Indian driver from Andhra achieved the highest fuel efficiency at the competition and was adjudged the winner.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+