புதிய இண்டிகாவை அறிமுகப்படுத்தும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் அதிக மைலேஜ் கொடுக்கும் ஹேட்ச்பேக் காராக இண்டிகா மாடல் திகழ்கிறது. இந்நிலையில், பாரத் ஸ்டேஜ்-IV மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட இண்டிகா வி2 மாடலை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.
இதைத்தொடர்ந்து,பாரத் ஸ்டேஜ்-IV மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்குப்பட்ட மேலும் ஒரு புதிய இண்டிகா மாடலை அறிமுகப்படுத்தும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவீரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இண்டிகா மாடல் வடிவமைப்பில் பல மாற்றங்களுடன் வெளிவர உள்ளது.
உட்புறத்திலும், ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தவிர, 70பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், பிக்கப்பிலும் சளைக்காமல் இருக்கும். அதேவேளை,புதிய தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பழைய இண்டிகா மாடலை விட 32சதவீதம் அதிக திறனையும், 46சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் தரவல்லதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய இண்டிகா மார்க்கெட்டில் நுழைந்தால், பல ஹேட்ச்பேக் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








