உற்பத்தியை அதிகரிக்க ரூ 300 கோடி முதலீடு-டொயோட்டோ

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் ஜாம்பவானான டொயோட்டோ நிறுவனம் இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் டொயோட்டோ வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, தேவையை நிறைவு செய்யும் வகையில், உற்பத்தி திறனை அதிகரிக்க டொயோட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்காக, ரூ.300 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டொயோட்டோ கிர்லோஸ்கர் நி்ர்வாக இயக்குனர் கூறியதாவது:
"கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், விற்பனை 31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எட்டியோஸ் காருக்கும் அதிக அளவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேவையை நிறைவு செய்யும் விதத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களுரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் ஆண்டுக்கு 2.1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்.
உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளோம். இதன்மூலம், அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 60,000 கார்களை தயாரிக்க முடி்யும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








