வரும் நவம்பரில் 2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், வரும் நவம்பர் முதல் வாரத்தில் ரேஞ்ச்ரோவர் இவோக் எஸ்யூவியையும், நவம்பர் மூன்றாவது வாரத்தில் ஜாகுவார் எக்ஸ்எப் செடான் காரையும் ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிமுகப்படுத்துகிறது.
இதில், ரேஞ்ச்ரோவர் இவோக் எஸ்யூவிக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. ஆனால், இறக்குமதி செய்யப்பட இருக்கும் முதல் லாட்டுக்கான அனைத்து இவோக் எஸ்யூவிக்கு புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.
ஜாகுவாரின் எக்ஸ்எப் சொகுசு செடான் கார் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது. எனவே, இந்த காருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு கார்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கிறது.
இந்த இரண்டு கார்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








