சாப்ட்வேர் பிரச்னை: 18,000 கார்களை திரும்பபெறுகிறது ஜாகுவார்

டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. மேலும், தொழில்நுட்ப வசதிகளிலும் ஜாகுவார் கார்கள் பிரபலமாக திகழ்கின்றன.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் எக்ஸ்-டைப் செடான் கார்களில் குரூஸ் கன்ட்ரோல் வசதியில் பிரச்னை இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதுகுறித்து ஜாகுவார் நிறுவனம் கார்களை ஆய்வு செய்தது. அதில், குரூஸ் கன்ட்ரோல் வசதியை பயன்படுத்தி விட்டு மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான சாப்ட்வேரில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது.
மேலும், இந்த பிரச்னை டீசல் மாடல்களில் மட்டும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சாப்ட்வேரை மாற்றித்தருவதற்காக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட டீசல் மாடல் எக்ஸ்-டைப் கார்களை ஜாகுவார் திரும்ப பெறுகிறது.
இதுகுறி்தது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜாகுவார் கடிதம் மூலம் தகவல் தெரிவித்து வருகிறது. மேலும், பிரச்னைக்குரிய கார்கள் சர்வீசுக்கு வரும்போது சாப்ட்வேரை மாற்றித்தர டீலர்கள் ஜாகுவார் அறிவுறுத்தியுள்ளது.
குரூஸ் கன்ட்ரோல் பிரச்னையுள்ள கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குரூஸ் கன்ட்ரோல் மோடிலிருந்து சாதாரண டிரைவிங் நிலைக்கு கொண்டு வருவதற்கு இக்னிசன் சாவியை ஆப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்துகொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜாகுவார் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த பிரச்னை காரணமாக இதுவரை விபத்து எதுவும் ஏற்பட்டதாக வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவொரு புகாரும் வரவில்லை என ஜாகுவார் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








