புதிய மாடல் ஜாகுவார் எக்ஸ்எப் சொகுசு கார்: புக்கிங் துவங்கியது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தை மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சொகுசு கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சிகளையும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், தனது மேம்படு்த்தப்பட்ட மாடல் எக்ஸ்எப் சொகுசு செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஜாகுவார் நிறுவனம். வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள்பக்கத்தில் பல்வேறு மாறுதல்களுடன் புதிய எக்ஸ்எப் சொகுசு காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜாகுவார்.
பழைய மாடலைவிட புதிய மாடல் எக்ஸ்எப் சற்று கூடுதல் விலையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய எக்ஸ்எப் காரில் 3லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் வருகிறது. மேலும், ஸ்போர்ட்டி லுக்குடன் வரும் எக்ஸ்எப்ஆர் மாடலில் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.
இந்தியாவில் புதிய எக்ஸ்எப் காருக்கான புக்கிங்கை ஜாகுவார் நிறுவனம் நேற்று துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








