உலகின் சிறந்த சொகுசு காராக டாடா ஜாகுவார் எக்ஸ்ஜே தேர்வு

Jaguar XJ
டெல்லி: அசத்தும் வடிவமைப்பு, அதிரடியான செயல்திறன் கொண்ட உலகின் சிறந்த சொகுசு கார் என்ற பெருமையை டாடா ஜாகுவாரின் எக்ஸ்ஜே கார் பெற்றுள்ளது.

வட அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோ ஷோவில் உலகின் சிறந்த கார்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவினர் காரின் செயல்திறன், வடிவமைப்பு, வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த கார்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த வடஅமெரிக்க ஆட்டோ ஷோவில், டாடா நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்ஜே கார் இந்த ஆண்டின் உலகின் சிறந்த சொகுசு காராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த கார் மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஜாகுவார் நிறுவனத்தின் உயரதிகாரி அட்ரியன் ஹால்மார்க் கூறியதாவது:

"எக்ஸ்ஜே காருக்கு இந்த பெருமை கிடைத்திருப்பது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நீதிபதி குழுவினர் எக்ஸ்ஜேவை தேர்வு செய்து அறிவித்துள்ளது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம். மேலும், அடுத்து மறுவடிவமைப்பு செய்து வரவுள்ள அனைத்து கார்களும் வடிவமைப்பிலும், செயல்திறனிலும் உலகம் முழுவதும் பேசப்படும்," என்றார்.

ஸ்போர்ட்டி வடிவமைப்பு கொண்ட ஹைஎண்ட் செடான் காரான ஜாகுவார் எக்ஸ்ஜே காரில் , 5.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், பிக்கப்பில் சூறாவளியாக சீறுகிறது. டெல்லியில் இந்த கார் ரூ.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2011, 11:43 [IST]
English summary
The all-new 2011 Jaguar XJ has been named as the International Luxury Car of the Year for its unique design and stellar performance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+