ஜனவரியில் வோக்ஸ்வேகன் கார் விற்பனை 10 மடங்கு உயர்வு

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் வாகன உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடம் வகிக்கிறது.இந்திய சந்தையில் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இந்நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை 10 மடங்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:
"வோக்ஸ்வேகன் கார்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,ஜனவரியில் 5601 கார்களை விற்பனை செய்துள்ளோம்.இது கடந்த ஆண்டு ஜனவரி மாத விற்பனையை (383கார்கள்)ஒப்பிடுகையில்,10 மடங்கு அதிகமாகும்.
ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த போலோ மாடலுக்கும்,செடான் ரகத்தை சேர்ந்த வெண்டோ மாடலுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இதுதவிர,அவுரங்காபாத் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும் பசட் மற்றும் ஜெட்டா மாடல்களும்,நியூ பீட்டில்,டோரக்,ஃபீட்டான் உள்ளிட்ட எஸ்யூவீ மாடல்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
எங்களது அனைத்து மாடல்களுக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால்,இந்த ஆண்டும் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கைஉள்ளது,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








