ரூ.10 கோடி விலையில் கோனிக்செக் சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம்

Koenigsegg Agera Super Car
டெல்லி: மணிக்கு 400 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன்படைத்த அகரா சூப்பர் காரை கோயனிக்செக் கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் சொகுசு கார் மார்க்கெட் வளர்ச்சியை பார்த்து அதிசயிக்கும் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் டாப் கியரில் இந்திய சந்தையில் அடி எடுத்து வைத்து வருகின்றன. இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்துள்ளது ஸ்வீடனை சேர்ந்த கோயனிக்செக் கார் நிறுவனம்.

சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனம், பல சூப்பர் அம்சங்கள் கொண்ட அகரா சொகுசு காரை இந்தியாவில் களமிறக்கி உள்ளது. அகராவின் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்த கார் வெறும் 3 நொடிகளில் 0-100 வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் வாய்ந்தது.

மணிக்கு அதிகபட்சம் 400 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன்படைத்த இந்த கார் வடிவமைப்பிலும் அசத்துகிறது. காரின் உட்புற வடிவமைப்பும் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. வரிவரியான நைலான் மற்றும் ரேடியத்தில் மின்னும் கன்சோல் மற்றும் சீட் கவர்கள் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

அகரா சூப்பர் காரில் சொகுசு அம்சங்களில் எந்த சிறு குறையும் கூற முடியாது. இந்திய மார்க்கெட்டில் உள்ள பல முன்னணி சொகுசு கார்களுக்கு அகரா சூப்பர் கார் கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் அடித்து கூறுகின்றனர்.

அகரா மாடலை தொடர்ந்து பல புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த கோயனிக்செக் திட்டமிட்டுள்ளது. கோயனிக்செக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ டீலராக இன்டர் குளோப் என்டர்பிரைஸ் நியமிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி விலையில் அகரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 30, 2011, 12:15 [IST]
English summary
Koenigsegg Agera has launched in India, it is one of the big launch witnessed by the Indian auto industry. It is the first power car from the Swedish auto giant which swears on the luxury, features and looks in Agera.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+