உலகின் அதிவேக கார் பட்டத்தை வெல்ல லம்போர்கினி அவென்டேடார் ரெடி

Lamborghini Super Car
டெல்லி: உலகின் அதிவேகமாக செல்லும் கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வேரோன் சாதனையை, விரைவில் வர இருக்கும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அவென்டேடார் சூப்பர் கார் விரைவில் துவங்க இருக்கும் பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய அவென்டேடார் காரில் 1,000 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக யூக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சமீபத்தில் அவென்டேடார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களில், இந்த கார் அதிவேகத்தில் செல்லும் வகையில் புதிய வீல் டிஸ்க் மற்றும் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

புகாட்டி வேரோன் போன்றே இதிலும் இரட்டை சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அவென்டடாரின் இன்னும் பிற முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தற்போது உலகின் அதிவேகத்தில் செல்லும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள புகாட்டி நிறுவனத்தின் வேரோன் சூப்பர் கார் மணிக்கு 431.07 கிமீ வேகத்தில் சென்று சாதனை புரிந்தது.

இந்த சாதனையை புதிய லம்போர்கினி அவென்டேடார் முறியடிக்குமா என்பதை தெரிந்துகொள்ள பிராங்க்பர்ட் மோட்டார் ஷோ துவங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 9, 2011, 9:50 [IST]
English summary
Lamborghini Aventador, the upcoming sensational supercar, is all set to replace the Bugatti Veyron as the fastest car in the world. The all new Aventador model will be carrying a top speed of 217 miles per hour, as per the recent unconfirmed media reports suggest.Recently the spy shots of the Lamborghini Aventador posted on a number of online blogs. The initial spy-shots suggest that the car will be carrying somewhat similar wheels as of the Bugatti Veyron. Moreover, the car will come equipped with a dual exhaust system. However, the company is yet to reveal the other features and specifications of the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+