விரைவில் இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் அறிமுகம்

Lamborghini Aventador
உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வைத்திருக்கும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் சூப்பர் கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. இதனால், ஃபெராரி, மஸராட்டி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே நுழைந்துவிட்டன.

இந்த நிலையில், சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமான லம்போர்கினி விரைவில் தனது அவென்டேடார் சூப்பர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அவென்டேடார் சூப்பர் காரில் 6496சிசி திறன் கொண்ட வி-12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 691 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் வல்லமை பொருந்தியது.

இந்த கார் வெறும் 2.9 நொடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் வாய்ந்தது. இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இந்த கார் இரண்டு கதவுகளை கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் 10 அவென்டடார் கார்களை விற்பனைக்கு லம்போர்கினி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூப்பர் கார் ரூ.4.12 கோடி ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால், இதைவிடவும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புக்கிங் செய்யப்படும் அவென்டேடார் சூப்பர் கார்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 5, 2011, 12:54 [IST]
English summary
Lamborghini to launch the Aventador super car in India soon. The company has allotted 10 avetadors to sale in India, reports said. Further, Lamborghini plans to commence the aventador deliveries by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+