ரூ.3.69 கோடியில் லம்போர்கினி அவென்டேடார் அறிமுகம்

Lamborghini Aventador
உலக அளவில் புகழ்பெற்ற லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.3.69 கோடி விலையில் இந்த புதிய சூப்பர் கார் முறைப்படி தற்போது அறிமுகம் செய்யப்பட்டாலும் ஏற்கனவே 11 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன.

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான மார்க்கெட் வெகுவாகவே வளர்ந்து வருகிறது. ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் இந்திய சந்தையில் அடுத்தடுத்து கால் பதிப்பதோடு, இந்திய வாடிக்கையாளர்கள் மீது நம்பிக்கை வைத்து பல கோடி விலை மதிப்புடையை கார்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது உலக அளவில் பிரபலமான தனது புத்தம் புதிய சூப்பர் காரான அவென்டேடாரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது லம்போர்கினி.

ஃபெராரிக்கு போட்டி:

ஃபெராரிக்கும் லம்போர்கினிக்கும் இடையே பல்வேறு நாட்டு சந்தைகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஃபெராரி நிறுவனம் தனது சூப்பர் ஹேட்ச்பேக் காரான எப்எப் காரை அறிமுகம் செய்து ஒரு சில நாட்களே ஆகிறது.

இந்த நிலையில், சொல்லி வைத்தாற்போன்று தனது அவென்டேடாரை களமிறக்கி ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டில் சூட்டை கிளப்பியுள்ளது லம்போர்கினி. தனது மூர்சிலாகோ சூப்பர் காருக்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் அவென்டேடார் சூப்பர் காரை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

அவென்டேடார் காரின் முக்கிய அம்சமே அதில் பொருத்தப்பட்டிருக்கும் வி-12 எஞ்சின்தான். இந்த எஞ்சின் வெறும் 2.9 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. 700 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த எஞ்சின் கொண்ட இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் வெறும் 50 மில்லி செகண்ட்களில் கியர்கள் மாறிவிடும் என்பதால் டிரைவிங்கில் புதியதோர் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அதிவேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த காரில் 400மிமீ 6 காலிபர் பிரேக்கும், பின்பக்கத்தில் 380மிமீ விட்டம் கொண்ட 4 காலிபர் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், எஞ்சினிலிருந்து பவர் அனைத்து வீல்களுக்கும் செல்லும் ஆல் டிரைவ் கொண்ட இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. இதில் முன்பக்கம் 19 இஞ்ச் அலாய் வீலும், பின்பக்கத்தில் 20 இஞ்ச் அலாய் வீலும் பொருத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பிலும் பிரத்யேக தோற்றத்தை கொண்டுள்ளதால் இந்தியாவில் அவென்டேடாருக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2011, 16:27 [IST]
English summary
It is a long established fact that Lamborghini and Ferrari always try to beat each other out of the competition. Lamborghini and Ferrari have been rivals for several years and their competition is now on Indian roads. Soon after Ferrari launched its FF Lamborghini has followed its rival by launching the Aventador in India.The Aventador is a sports car that is by far the most powerful, stylish and crazy car built by Lamborghini. The new car replaces the Murciealgo, another car that took performance levels to new heights when it was launched. The Aventador will be available with a starting price of Rs.3.69 crore (ex showroom, Delhi). The price might appear to be steep but Lamborghini has already sold 11 of them!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+