இவோக் எஸ்யூவியை நாளை அறிமுகப்படுத்த லேண்ட்ரோவர் திட்டம்

சொகுசு கார்கள் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற நிறுவனங்களான பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் தற்போது டாடா கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
டாடாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பணிகளை இரு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன.இந்தியாவில் சொகுசு கார்களுக்கான மார்க்கெட் அதிகரித்து வருவதும் அந்த நிறுவனங்களின் ஆர்வத்துக்கு முக்கிய காரணம்.
இந்த நிலையில், தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த புதிய இவோக் எஸ்யூவியை நாளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையிலுள்ள ஷோருமில் இந்த பிரிமியம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் பிரிட்டனிலுள்ள ஆலையிலிருந்து இவோக்கை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. பின்னர் இந்தியாவிலேயே டாடாவின் ஆலையில் இவோக்கை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இவோக்கின் விலை கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளை முறைப்படி இவோக் அறிமுகம் செய்யப்பட்டாலும் அந்த எஸ்யூவிக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.
மேலும், இறக்குமதியாக உள்ள முதல் லாட் இவோக் கார்கள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஜாகுவார் லேண்ட்ரோவர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








