திரும்ப திரும்ப...மாருதி கார்களையே வாங்கும் வாடிக்கையாளர்கள்!

இதை மாருதி நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இந்திய கார் விற்பனை சந்தையில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் 10லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை செய்து சாதனை இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
விற்பனையில் பல புதிய மைல் கற்களை எட்டுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பழைய வாடிக்கையாளர்களின் மேலான ஆதரவுதான் முக்கிய காரணம், என்று மாருதி நிறுவனம் கூறியுள்ளது மாருதி. அதாவது ஒரு படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் போல மாருதி கார்களுக்கும் ரிப்பீட் வாடிக்கையாளர்கள் ஏக போகமாக உள்ளனர்.
இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"கடந்த நான்காண்டுகளில் மொத்த கார் விற்பனையில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 52சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதும்,வாடிக்கையாளர்கள் அடுத்த கார் வாங்கும்போதும் மாருதி கார்களையே தேர்வு செய்து வாங்குகின்றனர்.
இதனால், மாருதி கார்களின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனை வளர்ச்சிக்கு பழைய வாடிக்கையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்திய கார் விற்பனை சந்தையில் எங்கள் நிறுவனம் 50சதவீத இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








