ஆப்பிரிக்க நாடுகளில் டிராக்டர் தொழிற்சாலைகள் அமைக்கும் மஹிந்திரா

உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொண்டு, அங்கு டிராக்டர் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு தகுந்தவாறு, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் துனிசியா, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா, கென்யா, எத்தியோபியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளில் புதிய டிராக்டர் அசெம்பிளிங் தொழிற்சாலைகளை அமைக்க மஹிந்திரா திட்டமிட்டுளளது.
மஹிந்திரா சர்வதேச விவகாரங்களுக்கான தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறியதாவது:
"விவசாய கருவிகள் மற்றும் டிராக்டர்களுக்கு ஆப்பரிக்க நாடுகளின் சந்தைகளில் அதிக கிராக்கி உள்ளது. இதையடுத்து, அங்கு விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். மஹிந்திராவின் உயரதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அங்கு சென்று விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த உள்ளனர்.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் மார்கெட் நிலவரத்தை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ப விற்பனை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். விற்பனையை அதிகரிக்கும் வகையில், ஆப்பிரிக்க நாடுகளில் டிராக்டர் அசெம்பிளிங் தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








