கார்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்துகிறது மஹிந்திரா

கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம் பெரும்பாலான கார் நிறுவனங்கள் கார்களின் விலையை கடுமையாக உயர்த்தின. இதனால், வருவாய் இழப்பில் இருந்து ஓரளவு தப்பியதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்பை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன . இந்த வரிசையில், மஹிந்திரா நிறுவனமும், கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா ஆட்டோ தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:
"உற்பத்தி செலவீனத்தை தாக்குமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கார் விலையை மீண்டும் உயர்த்துகிறோம். ஸ்கார்ப்பியோ, பொலிரோ மற்றும் லோகன் கார்களின் விலையை 1.5 முதல் 2 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
இதனால், குறைந்தது ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை மாடலுக்கு தகுந்தாற்போல் கார்கள் விலை உயரும். விற்பனையை பாதிக்காத வகையில் விலை உயர்வை அறிவித்துள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








