அடுத்த ஆண்டு சாங்யாங் எஸ்யூவீயை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

Mahindra Deal
டெல்லி: அடுத்த ஆண்டில் சாங்யாங் நிறுவனத்தின் எஸ்யூவீ மற்றும் இரண்டு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

நிதிநெருக்கடியில் சிக்கி தத்தளித்த கொரியாவின் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, சாங்யாங் மோட்டார்சை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளை மஹிந்திரா தீவீரமாக மேற்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கார் சந்தைகளில் சாங்யாங் தயாரிப்புகள் மீண்டும் முக்கிய இடம் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மஹிந்திரா மேற்கொண்டு்ள்ளது. இந்தியாவிலும், சாங்யாங் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் கூறியதாவது:

"சாங்யாங் தயாரிப்புகளை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றோம். சாங்யாங்கின் புதிய எஸ்யூவீ மாடல் மஹிந்திரா ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மேலும், சாங்யாங்கின் தயாரிப்பில் உருவான இரண்டு கார்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

மஹிந்திரா அறிமுகப்படுத்தப்பட உள்ள சாங்யாங் மாடல்கள் இந்திய சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், புனே அருகிலுள்ள மஹிந்திரா தொழிற்சாலையி்ல், சாங்யாங் தயாரிப்புகள் அசெம்பிள் செய்யப்படும்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2011, 10:24 [IST]
English summary
Mahindra & Mahindra announced the launch of its new global SUV (sports utility vehicle) plus two new car models from SsangYong portfolio, next year
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+