டாடா மோட்டார்சின் சிறிய சரக்கு, பயணிகள் வாகனம் அறிமுகம்

ஆட்டோவுக்கு சரியான மாற்று போக்குவரத்து வசதியை மாஜிக் ஐரிஸ் பயணிகள் வாகனம் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஓர் ஆண்டு அல்லது 36,000 கி.மீ. வாரண்டி, 11 எச்.பி.யை திறனை வெளிப்படுத்தும் 611 சிசி எஞ்சின், ஆகிய அம்சங்களுடன் மாஜிக் ஐரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்க்டிக்ட் வொயிட்,ரூபி ரெட், ஸ்கூல் யெல்லோ, ஜெட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் மாஜிக் ஐரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஏஸ் மினி டிரக் பிளாட்பார்மில், ஏஸ் ஸிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 600 கிலோ எடையை சுமந்து செல்லும் மைக்ரோ டிரக் ரகத்தை சேர்ந்தது. இது சிறு வணிகர்களுக்கு உற்றதாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பையில் மாஜிக் ஐரிஸ் பயணிகள் வாகனம் ரூ.1.90 லட்சம் விலையிலும், ஏஸ் ஸிப் ரூ.1.95 லட்சம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








