உதிரிபாக சப்ளையர்களுக்கு மஹிந்திரா அறிவுரை

வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு முதல் சந்தையில் நிலவும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஆண்டு முதல் உதிரிபாக சப்ளையர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது.
சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு்க்கான கூட்டத்தை கொரியாவில் நடத்த மஹிந்திரா முடிவு செய்தது. இதன்படி, அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களின் கூட்டம் சமீபத்தில் சியோலில் நடந்தது.
இதில், மஹிந்திரா, ஸ்வராஜ் மற்றும் ரேவா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் சுமார் 150 நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சாங்யாங்குக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்யும் 30 நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனம் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு ஆகியவற்றால் வாகன விற்பனை பாதிக்கப்படுவதை தடுக்கவும், சாங்யாங்கின் வர்த்தகத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மஹிந்திரா உயரதிகாரிகள், உதிரிபாகங்களுக்கான உற்பத்தி செலவீனத்தை குறைத்து, குறித்த நேரத்தில் சப்ளை செய்யவேண்டும் என்று சப்ளையர்களை கேட்டுக்கொண்டனர்.
மேலும், எதிர்காலத்தில் சந்தையின் வளர்ச்சியையும், தேவையையும் கருத்தில்கொண்டு தங்களது உற்பத்தி திறனை அதிகரித்துக்கொள்ளுமாறும் சப்ளையர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் மூலம், உதிரிபாக சப்ளையர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையிலான உறவு பலப்படுவதாகவும், பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காணப்படுவதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








