சரியான விலை போட்டி: வெற்றியாளருக்கு மஹிந்திரா எஸ்யூவி பரிசு

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எக்ஸ்யூவி-500 எஸ்யூவியை பிரபலப்படுத்த மஹிந்திரா நிறுவனம் நூதன போட்டி ஒன்றை அறிவித்தது.
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட அந்த எஸ்யூவியின் விலையை சரியாக கூறுபவருக்கு அந்த எஸ்யூவியையே பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்று தங்களது யூக விலையை மஹிந்திரா இணையதளத்தில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கோல்ஹாப்பூரை சேர்ந்த அமீத் மேட் என்பவர் புதிய எஸ்யூவியின் விலையை சரியாக பதிவு செய்து போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு புத்தம் புதிய எக்ஸ்யூவி-500 எஸ்யூவியை மஹிந்திரா வழங்கியது. புனேயில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் நடந்த விழாவில் புதிய எஸ்யூவி அமிட் மேட்டிடன் வழங்கப்பட்டது.
புதிய எஸ்யூவியை பரிசாக பெற்ற அமீத் மேட் கூறியதாவது:
"சிறு வயது முதலே மஹிந்திரா எஸ்யூவியை வாங்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்து வந்தது. அந்த கனவு தற்போது நனாவகியுள்ளது. மஹிந்திராவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications








