ரஷ்யா, சீனாவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

Mahindra XUV 500
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட தனது புதிய எஸ்யூவியை மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்தது.

ரூ.10.8 லட்சம் விலையில் அறிமுகப்படுத்த மார்க்கெட்டை அதிர வைத்துள்ளது மஹிந்திரா. இந்த நிலையில், இந்த புதிய குளோபல் எஸ்யூவியை ரஷ்யா மற்றும் சீனாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மஹிந்திரா ஏற்கனவே காலூன்றியுள்ளது. அங்கு விரைவில் புதிய எக்ஸ்யூவி5ஓஓ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி விட்டது.

இதைத்தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சீனாவிலும் புதிய எக்ஸ்யூவி5ஓஓ எஸ்யூவியை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தற்போது எக்ஸ்யூவி5ஓஓ எஸ்யூவியில் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் காமன் ரயில் டர்போ எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா செல்லும் இந்த புதிய எஸ்யூவி காரில் 140 பிஎச்பி எஞ்சினுடன் செல்ல இருக்கிறது. பின்னர் வெளிநாட்டு சந்தைகளுக்கு செல்லும் எக்ஸ்யூவி5ஓஓவில் 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சினை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் எம்ஹாக் எஞ்சின்தான் என்றாலும் ட்யூனிங்கில் வேறுபடும்.

டச் ஸ்கிரீன் ஜிபிஎஸ், வாய்ஸ் கன்ட்ரோல் செயல்பாடுகள், ஹில் டிசன்ட், குரூஸ் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிநாட்டு சந்தைகளுக்கு எக்ஸ்யூவி5ஓஓ செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 3, 2011, 11:15 [IST]
English summary
Mahindra planning to launch the New XUV5oo in China and Russian markets. Anand Mahindra quoted that it was high time that the Brand Mahindra was recognized as a global brand and they will plans to launch the XUV500 in overseas market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+