வரும் 28ந் தேதி அறிமுகமாகிறது மஹிந்திரா புதிய எஸ்யூவி

Mahindra XUV 500
நவீன தொழில்நுட்ப அம்சங்களின் சங்கமமாக உருவாக்கியுள்ள தனது புதிய குளோபல் எஸ்யூவியை வரும் 28ந் தேதி அறிமுகப்படுத்த மஹிந்திரா நாள்குறித்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் கால் பதிக்கும் விதமாக குளோபல் கான்செப்ட் எஸ்யூவி காரை மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

எக்ஸ்யூவி-500 என்று பெயரிடப்பட்ட இந்த புதிய எஸ்யூவி கார் குறித்து மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பு அலை நிலவுகிறது.

தொழில்நுட்பத்திலும் சரி, வசதிகளிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களின் கார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய எஸ்யூவியை வடிவமைத்துள்ளது மஹிந்திரா.

ட்ராக்ஸன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், குரூஸ் கன்ட்ரோல், ஆல் வீல் டிஸ்க் பிரேக், மழை வருவதை கண்டறித்து தானியங்கி முறையில் இயங்கும் வைப்பர் என டாப் வேரியண்ட் எஸ்யூவியாக இது களமிறங்குகிறது.

தவிர, டில்ட் ஸ்டீயரிங், இருளில் தானாக எரியும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், பகல் நேர ரன்னிங் விளக்குகள் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த கார் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏபிஎஸ், இபிடி, மல்டிப்பிள் ஏர்பேக்ஸ் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளையும் தாங்கி வருகிறது இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விலையில் இந்த கார் அறிமுகமாக இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 17, 2011, 9:37 [IST]
English summary
Mahindra recently revealed the name of their highly anticipated World SUV as the XUV500 (pronounced 5 double-oh). The new SUV will hit the showrooms on the 28th of September. To be powered by a higher output variant of the 2.2-liter mHawk engine mated with a six speed tranny, the XUV 500 will be loaded to the gills with features and technology. The seven seater SUV will have advanced tech such as traction control, Electronic Stability Progarmme, Cruise Control, all-four disc brakes and rain sensing wipers available on the top end variant of the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+