ஜனவரி முதல் வாகனங்கள் விலையை 3% உயர்த்தும் மஹிந்திரா

ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனமான மஹிந்திரா உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு என்ற வழக்கமான காரணத்தை கூறி தனது அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் இறக்குமதி செலவீனம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறி வெளிநாட்டு கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துவிட்டன.
டொயோட்டோ, ஜெனரல் மோட்டார்ஸ், நிசான், ஹூண்டாய் என பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் கார் விலை உயர்வை அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் வழக்கமான காரணத்தை கூறி விலை உயர்வை அறிவித்துள்ளது. தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதே வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








