சர்வதேச மார்க்கெட்டுகளுக்கு செல்லும் ஜீனியோ பிக்கப் டிரக்: மஹிந்திரா

1.25 டன் கொள்திறன் கொண்ட ஜீனியோ என்ற பிக்கப் டிரக்கை கடந்த சில மாதங்களுக்கு முன் உள்நாட்டு சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்தது.
உலகத்தரம் வாய்ந்த கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிக்கப் டிரக் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா தெரிவித்திருந்தது.
இதன்படி, சிங்கிள் மற்றும் டபுள் கேபின் கொண்ட புதிய ஜீனியோ பிக்கப் டிரக் விரைவில் ஆசிய, ஆப்ரிக்க சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவில் வெகுவிரைவில் ஜீனியோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க சந்தையிலும் விரைவில் ஜீனியோ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஜீனியோ பிக்கப் டிரக் 2.2 லிட்டர் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120பிஎச்பி திறனையும், 290 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதில், உயர்ரக கார்களில் உள்ளதுபோன்று நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படும் வகையில் குரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கும்.
மேலும், டிஜிட்டல் டிரைவ் அசிஸ்ட் சிஸ்டம்(டிடிஏஎஸ்) வசதியையும் சர்வதேச சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜீனியோ கொண்டிருக்கும்.
1.25 டன் கொள்திறன் கொண்ட ஜீனியோ பிக்கப் டிரக் 4 வீல் டிரைவுடன் வர இருக்கிறது.
சொகுசு, கையாளுமை மற்றும் பாதுகாப்பு என அம்சங்களிலும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திராவின் ஜீனியோ புதிய அனுபவத்தை தரும் என்று மஹிந்திரா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








