புதிய எஸ்யூவி காரை விரைவில் களமிறக்குகிறது மஹிந்திரா

Mahindra W201 SUV
டெல்லி: ஸ்கார்ப்பியோ கார் மூலம் எஸ்யூவி மார்க்கெட்டை ரணகளப்படுத்திய மஹிந்திரா நிறுவனம், அடுத்த மாதம் 26ந் தேதி புதிய குளோபல் எஸ்யூவி காரை களமிறக்குகிறது.

டபிள்யூ-201 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி கார் வடிவமைப்பில் 100/100 மார்க் வாங்கும் என ஆட்டோ நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்.

ஸ்வெப்ட் லேம்ப் ஹெட்லைட் வடிவமைப்பு, மிடுக்கு தோற்றத்தை தரும் முன்பக்க கிரில் என அனைத்திலும் புதிய எஸ்யூவி கார் மஹிந்திராவின் பெயரை மேலும் ஒருபடி உயர்த்தும் என தெரிகிறது.

பேனட்டிலிருந்து முகப்பு கண்ணாடியையும் கூரையையும் சேர்த்து டேப்பர் அடித்ததுபோன்ற வடிவமைப்பை பெற்றுள்ளதால் சீறும் சிறுத்தை போன்று இருக்கும்.

டிரான்ஸ்ஆக்ஸில் கொண்ட 2.2 லிட்டர் ஹாக் எஞ்சினுடன் வரும் இந்த புதிய எஸ்யூவி வேகத்தில் விவேகத்தை காட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 ஸ்பீடு கேபிள் ஆப்பரேட்டிங் கியர்பாக்ஸ் கொண்ட டபிள்யூ-201 எஸ்யூவி டிரைவிங்கில் புதிய பரவசத்தை கொடுக்கும்.

120 முதல் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ட்வின்டர்போ எஞ்சினை எதிர்காலத்தில் 179 பிஎச்பி திறன் கொண்ட எஞ்சினாக மாற்ற மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மலைபாங்கான சாலைகளில் செல்வதற்கு ஏதுவாக டிசென்ட் கன்ட்ரோல், சிறப்பு ட்ராக்ஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பங்களை இந்த புதிய எஸ்யூவி கொண்டிருக்கும்.

ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 16, 2011, 11:26 [IST]
English summary
Auto major Mahindra and Mahindra is busy with launch plans. It is believed to be in talks to launch Mahindra W201 SUV by end of September. Speculations are rife that the launch date in India would be around the last week of September. Mahindra is all geared up for the launch and has already been in talks with their vendor chain to manage the launch and sale. According to experts, the all new Mahindra W201 SUV gets ten on ten for looks. It has a strong build and the masculine contours compliment its functionality. Mahindra W201 SUV will be accompanied with the swept back headlamps. The curved grille look is striking and there is a beltline with a tapered roof adding more charm to this car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+