ஸ்பெஷல் எடிசன் பொலிரோ: மஹிந்திரா அறிமுகம்

Mahindra Bolero Special Edition
டெல்லி: அட்டகாசமான ஸ்டைலுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் பொலிரோவை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா நிறுவனம்.

ஸ்பெஷல் எடிசன் மஹிந்திராவின் வெளிப்புறம் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்களால் ஜொலிக்கிறது. முன்பக்க கிரில்லில், வலை பொருத்தப்ப்டடுள்ளதால் எடுப்பான தோற்றத்தை தருகிறது.

புதிய வடிவமைப்புடன் கூடிய டேஷ்போர்டு, லெதர் சீட் என உட்புறத்தின் அனைத்து பகுதிகளும் கண்ணை கவர்கின்றன. இதுதவிர, மொபைல்போன் வழியாக எஸ்எம்எஸ் அனுப்பி காரை திறந்து மூடும், நவீன தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்பு வசதி(டெலி அசிஸ்ட் லாக் சிஸ்டம்) இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய பொலிரோவில் அதிக சக்தியை வெளிப்படுத்தும் வகையில் 2.5 லிட்டர் டிஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 63 ஹார்ஸ்பவரையும், 180 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், பிக்கப்பையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1,000 ஸ்பெஷல் எடிசன் பொலேரோ கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. சகாரா பியேஜ் மற்றும் மிஸ்டிக் பர்ப்புள் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பொலிரோவுக்கு, ரூ.7.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2011, 9:19 [IST]
English summary
Bolero is one of the best selling products from the Mahindra stable. The company sold more than 8200 units of the vehicle in March 2011 alone. Mahindra has just introduced a special edition version of the MUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+