கேப் முத்திரையை கிழித்தெறிந்து குடும்ப காராக மாறும் மஹிந்திரா வெரிட்டோ

Mahindra Verito
கேப் கார் என்று முத்திரை குத்தப்பட்ட மஹிந்திரா வெரிட்டோ கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப கார் என்ற அந்தஸ்துக்கு மாறி வருகிறது.

எனவே, ஒரு முழுமையான குடும்ப கார் அந்தஸ்துக்கு கொண்டு செல்லும் விதமாக வெரிட்டோ ஸ்பெஷல் எடிசனை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா கூட்டணியிலிருந்து பிரான்சை சேர்ந்த ரினால்ட் விலகியதையடுத்து, லோகன் காரின் விற்பனையை மஹிந்திரா எடுத்துக் கொண்டது.

மேலும், கேப் கார் என்று முத்திரைக் குத்தப்பட்ட லோகன் காரின் பெயரை வெரிட்டோ என பெயர் மாற்றம் செய்து மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்தது மஹிந்திரா.

இதனால், வெரிட்டோவின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. மஹிந்திரா-ரினால்ட் கூட்டணியின்போது மாதத்திற்கு அதிகபட்சம் 800 கார்கள் மட்டுமே விற்பனையாகி வந்தது.

ஆனால், தற்போது வெரிட்டோவின் விற்பனை 1,500 முதல் 1,600 என்ற இரட்டிப்பு நிலைக்கு உயர்ந்துள்ளது. பெரும்பாலும், கேப் சாராத வாடிக்கையாளர்கள் வெரிட்டோவை வாங்க துவங்கியுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால், கேப் முத்திரையிலிருந்து வெரிட்டோ குடும்ப கார் என்ற அந்தஸ்தை பெற்று வருகிறது.

இதை தக்கவைக்கும் விதமாகவும், பண்டிகை காலத்தையொட்டியும், ஸ்பெஷல் எடிசன் வெரிட்டோவை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

வெரிட்டோவின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட டாப் வேரியண்ட்டில் மட்டும் எக்ஸிக்யூட்டிவ் எடிசன் கிடைக்கும்.

பியேஜ் இன்டிரியர், லெதர் இருக்கைகள் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் வெளிப்புறம் ஸ்பெஷல் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர் உள்ளிட்ட கூடுதல் சிறப்புகளை வெரிட்டோ எக்ஸிக்யூட்டிவ் எடிசன் கொண்டுள்ளது.

இந்த புதிய எக்ஸிக்யூட்டிவ் எடிசன் வெரிட்டோ ரூ.7.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 10, 2011, 20:11 [IST]
English summary
Mahindra has introduced special edition Verito sedan in market. The executive edition verito will only available in 1.5 liter top variant diesel model. The special edition verito priced at Rs.7.09 lakh (exshowroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+