புதிய எஸ்யூவி காருக்கு எக்ஸ்யூவி-500 என பெயர்சூட்டியது மஹிந்திரா

ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வடிவமைப்பு வல்லுனர்கள் ஒத்துழைப்புடன் தான் உருவாக்கிய உலகத்தரம் வாய்ந்த குளோபல் எஸ்யூவி காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
டபிள்யூ-201 குளோபல் எஸ்யூவி என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த எஸ்யூவி காருக்கு எக்ஸ்யூவி-500 என்று பெயர் சூட்டியுள்ளது மஹிந்திரா.
பிரிமியம் எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் தனக்கு இருக்கும் நன்மதிப்பை உலக அளவில் பரைசாற்றும் வகையில் மஹிந்திரா உருவாக்கியுள்ள இந்த புதிய எஸ்யூவி கார் இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை எடுத்துணர்த்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வரும் இந்த புதிய குளோபல் எஸ்யூவி கார் சென்னையில் உள்ள மஹிந்திரா வடிவமைப்பு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது(ஸ்கார்ப்பியோ காரும் இங்குதான் வடிவமைக்கப்பட்டது).
தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் இந்த புதிய எஸ்யூவி காரை மஹிந்திரா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு தக்கவாறு மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இந்த காரை மஹிந்திரா விரிவான சோதனைஓட்டங்களை நடத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








