புதிய 4 வீல் டிரைவ் ஸ்கார்ப்பியோவை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

Mahindra Scorpio
மிட் வேரியண்ட் ஸ்கார்ப்பியோவில் 4 வீல் டிரைவ் வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி தற்போது எல்எக்ஸ் என்ற தற்போது 2 வீல் டிரைவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விஎல்எக்ஸ் டாப் வேரியண்ட்டில் மட்டுமே தற்போது 4 வீல் டிரைவ் வசதியுடன் கிடைத்து வந்தது. இந்த நிலையில், எல்எக்ஸ் வேரியண்ட்டிலும் தற்போது 4 வீல் டிரைவ் வசதியுடன் ஸ்கார்ப்பியோ மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

இதில் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 120 பிஎச்பி ஆற்றலையும், 290 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

2 வீல் டிரைவ் எல்எக்ஸ் வேரியண்ட்டைவிட 4 வீல் டிரைவ் கொண்ட எல்எக்ஸ் வேரியண்ட் எடையில் 100 கிலோ கூடுதலாக உள்ளது. இதனால், மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்சில் சிறிது குறையும் என்று கருதப்படுகிறது.

எஸ்எல்எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கார்பியோ 4 வீல் டிரைவுடன் வந்தாலும், ஏபிஎஸ்,ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வில்லை.

இதுதவிர, ஏராளமான வசதிகளும் இதில் இடம்பெறவில்லை. ஆனால், கரடு முரடான சாலை நிலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கார்ப்பியோ சற்று குறைவான விலையில் வந்துள்ளது.

இந்த புதிய ஸ்கார்ப்பியோ ரூ.9.17 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

எல்எக்ஸ் 4 வீல் டிரைவ் ஸ்கார்ப்பியோவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை காணலாம்.

டியூப்லெஸ் டயர்கள்

டில்ட் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங் மற்றும் பவர் விண்டோ

5 ஸோன் குஷன் சஸ்பென்ஷன்

டிஜிட்டல் இம்மொபைலைஸர்

கிராஷ் புரோடெக்ஷன் கிரம்பிள் ஸோன்ஸ்

சைல்டு லாக்

மொபைல்போன் சார்ஜர்

இல்லுமினேடட் ஸ்பாய்லர்

ரூப் டாப் ஸ்கை ரேக்குகள்

சென்ட்ரல் லாக்கிங்

மேற்கண்ட அம்சங்கள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக புதிய 4 வீல் மாடல் ஸ்கார்ப்பியோவில் இடம்பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 24, 2011, 12:45 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+