ரூ.6.19 லட்சத்தில் புதிய பொலிரோ: மஹிந்திரா அறிமுகப்படுத்தியது

New Mahindra Bolero
எஸ்யூவி தயாரி்ப்பில் ஸ்பெலிஷ்ட் பட்டத்தை தனதாக்கியுள்ள மஹிந்திரா நிறுவனம் புதிய எஞ்சின் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பொலிரோவை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி என்ற பெருமையை மஹிந்திராவின் பொலிரோ தக்க வைத்து வருகிறது. அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் பொலிரோ இருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பொலிரோவை பேஸ்லிப்ட் செய்து அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா.

புதிய முகப்பு விளக்குகள் டிசைன், புத்தம் புது முன்பக்க கிரில், புதிய பாடி கிராபிக்ஸ் என அனைத்தும் பொலிரோவின் பொலிவை கூட்டுகிறது. மேலும், டேஷ்போர்டு மரவேலைப்பாடுகளுடன், புதிய சென்ட்ரல் கன்சோல், புதிய வடிவத்துடன் கூடிய ஸ்டீயரிங் வீல், அழகான கியர் ஷிப்டிங் லிவர் என ஏராளமான மாற்றங்கள் கண்டுள்ளது.

சீ்ட் பெல்ட் குறித்து வாய்மொழி எச்சரிக்கை, டியூவல் டோன் சீட் கவர்ஸ் என அனைத்திலும் புதுமை தெரிகிறது. 2.5 லிட்டர் எஞ்சின் 63 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். தவிர, ஏஆர்ஏஐ சான்றுபடி, லிட்டருக்கு புதிய பொலிரோ 15.96 கிமீ செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பொலிரோவைவிட ரூ.6,000 மட்டும் கூடுதல் விலையில் புதிய பொலிரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல்:

வேரியண்ட் பிஎஸ்-3 பிஎஸ்-4
பொலிரோ எஸ்எல்இ ரூ.6.19 லட்சம் ரூ.6.33 லட்சம்
பொலிரோ எஸ்எல்எக்ஸ் ரூ.6.67 லட்சம் ரூ.6.81 லட்சம்
பொலிரோ இசட்எல்எக்ஸ் ரூ.6.82 லட்சம் ரூ.6.96 லட்சம்

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2011, 11:20 [IST]
English summary
Mahindra and Mahindra today launched the new face-lifted new Bolero in Mumbai. The new Bolero is priced at Rs.6.33 which is about Rs.6,000 more expensive than the model it is replacing. The new Bolero will be available in two variants, the base SLE variant will be available at 6.33 lakhs and the ZLX BS4 variant which is available at 6.96 lakhs (ex-showroom Delhi). The Mahindra Bolero has been in the Indian car market for over eight years. Many people had written off the model as an old one but Mahindra had other thoughts. The New Bolero is not only fresher but is also more powerful and efficient. Mahindra has not limited itself with just a cosmetic upgrade fore the Bolero. It has gone the full distance by adding a new and efficient diesel engine, added more user friendly features and the interior looks more sumptuous.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+