தென் ஆப்ரிக்காவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

எக்ஸ்யூவி5ஓஓ என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.
ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படு்த்தியுள்ளது.
மேலும், இந்த புதிய எஸ்யூவியின் அறிமுக விழாவில் பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா,"அயல் நாட்டு சந்தைகளில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதன்முதலாக தென் ஆப்ரிக்காவில் புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, ரஷ்யா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








