ஜியோ பயணிகள் வாகனம்:மஹிந்திரா அறிமுகம்

By
Mahindra Gio Passenger Cab
பாட்னா: பயணிகளை ஏற்றத்தக்க வகையிலான ஜியோ மினி பாசஞ்சர் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் பீகாரில் அறிமுகம் செய்துள்ளது.

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம்,அரை டன் கொள்ளளவு கொண்ட ஜியோ என்ற மினி லோடு வாகனத்தை அறிமுகப்படுத்தியது.மைலேஜில் பின்னி எடுப்பதால் ஜியோ,விற்பனையும் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில்,பயணிகளை ஏற்றத்தக்க வகையிலான ஜியோ பாசஞ்சர் மாடலை மஹிந்திரா நிறவனம் பீகாரில் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறி்த்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜியோ பயணிகள் வாகனத்திற்கு ரூ.1.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் ரகத்தை சேர்ந்த மற்ற வாகனங்களை ஒப்பிடும்போது எரிபொருள் சிக்கனத்தில் ஜியோ விஞ்சும்.ஒரு லிட்டர் டீசலுக்கு இது 30கி.மீ.,வரை செல்லும்.இதில்,441.5சிசி திறன்கொண்ட டைரக்ட் இன்ஜெக்ட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இது 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பயணிகள் வாகனம்,பியாஜியோவின் அபே ஆட்டோ,பஜாஜ் ஆட்டோக்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 16, 2011, 9:22 [IST]
English summary
Mahindra have launched the passenger cab variant of their Gio quadricycle platform. The company seems to be planning to play it safe with a plan to launch the new vehicle in a phased manner. Bihar is the first and only state where the vehicle has been launched. M&M have priced the Gio passenger cab at a very lucrative 1.95 lakh rupees.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+