புதிய அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் மஹிந்திரா ஸைலோ

பண்டிகை காலத்தையொட்டி ஏறத்தாழ அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகப்படுத்திவிட்டன. இந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு மஹிந்திரா.
அழகான எம்யூவி என்று பெயர் வாங்கியுள்ள ஸைலோவின் லிமி்டேட் எடிசனை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் ஷோரூம்களை வந்தடைய உள்ள இந்த புதிய ஸைலோ லிமிடேட் எடிசனுக்கான அங்க அடையாளங்களை கொண்டிருக்கிறது.
வெளிப்புறம் கண்ணை கவர்ந்திழுக்கும் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர் லிமிடேட் எடிசன் ஸைலோவை எளிதாக வேறுபடுத்துகிறது. மேலும், பியர்ல் ஒயிட் மற்றும் வால்நட் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே லிமிடேட் எடிசன் ஸைலோ கிடைக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மேலும், லிமிடேட் எடிசன் என்பதை காட்டும் பிரத்யேக சின்னமும் வெளிப்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக தரத்துடன் கூடிய இன்டிரியர் வேலைப்பாடுகள் லிமிடேட் எடிசன் ஸைலோவுக்கு புதிய பொலிவை கொடுக்கிறது.
இதில், இறக்குமதி செய்யப்பட்ட லெதர் இருக்கைகள் காரில் அமரும்போது கூடுதல் சுகத்தை கொடுக்கும் என்பது கியாரண்டி. கதவுகளில் மரவேலைப்பாடுகளுடன் பினிஷ் செய்யப்பட்டிருப்பது லிமிடேட் எடிசன் ஸைலோவுக்கு கூடுதல் பலம்.
ஏர்பேக்குகள், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், சிஆர்டிஐ எஞ்சின் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லக்கூடிய தொழில்நுட்ப அம்சங்கள். லிமிடேட் எடிசன் ஸைலோ டெல்லியில் ரூ.9,14,300 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








