புதிய எஸ்யூவி புக்கிங் செம விறுவிறுப்பு: மஹிந்திரா சுறுசுறுப்பு

அறிமுகம் செய்யப்பட்டு 6 நாட்களில் புதிய எஸ்யூவி புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருவதால் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 5 நகரங்களில் மட்டும் புக்கிங் 5,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளதாக மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
புதிய எஸ்யூவி்க்கு இந்திய மார்க்கெட்டில் கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து வெளிநாட்டு சந்தைகளில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது.
மேலும், புதிய எஸ்யூவியின் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருவது குறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி ராஜேஷ் ஜேஜுரிகார் கூறியதாவது:
"கடந்த 1ந் தேதிதான் புதிய எஸ்யூவிக்கு புக்கிங்கை துவக்கினோம். சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும்தான் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்பாராத வகையில் இந்த 5 நகரங்களில் மட்டும் புதிய எஸ்யூவியின் புக்கிங் 5,000 கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் புதிய எஸ்யூவிக்கு கொடுத்துள்ள வரவேற்பு எங்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது," என்றார்.
மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக புக்கிங் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ள போதிலும் பல நகரங்களில் உள்ள ஷோரூம்களில் புதிய எஸ்யூவிக்கு புக்கிங் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிய எஸ்யூவி புக்கிங் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றும் அந்த தகவல்கள் தெரிவி்க்கின்றன.
உலகத்தரம் வாய்ந்த இந்த புதிய எஸ்யூவி சென்னையில் உள்ள மஹிந்திராவின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில்தான் வடிவமைக்கப்பட்டது. சீறும் சிறுத்தையை மனதில் கொண்டு இந்த மையத்தின் வடிவமைப்பு வல்லுனர்களின் 4 ஆண்டுகால அயராத உழைப்பில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள சகன் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்சாலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் மாதத்திற்கு 2,500 புதிய எஸ்யூவிக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








