கார்களுக்கு ரூ.60,000 வரை மஹிந்திரா தள்ளுபடி

ஆண்டு இறுதியில் கார் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அனைத்து கார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இதில் தற்போது மஹிந்திராவும் இணைந்துகொண்டுள்ளது. அதிகபட்சமாக தனது எம்பிவி மாடலான ஸைலோவுக்கு ரூ.60,000 தள்ளுபடி வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
இதேபோன்று, மஹிந்திரா விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.40,000 தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி சலுகைகளால் ஸ்கார்ப்பியோ மற்றும் ஸைலோ ஆகியவை ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரினால்ட் பிராண்டிலிருந்து விலகி தற்போது மஹிந்திரா வசம் வந்துள்ள வெரிட்டோ செடான் காருக்கு ரூ.35,000 சலுகை வழங்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது. ஆனால், பொலேரோ ஜீப்புக்கு தள்ளுபடி சலுகை எதையும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








