லிட்டருக்கு 14 கிமீ செல்லும் புதிய ஸ்கார்ப்பியோ: மஹிந்திரா அறிமுகம்

எஸ்யூவி மார்க்கெட்டில் ஜாம்பவனாக வலம் வரும் ஸ்கார்ப்பியோ கார் மஹிந்திராவின் பெயர் சொல்லும் பிள்ளையாக வலம் வருகிறது. சொகுசு, மிடுக்கு, புதிய தோற்றத்துடன் கூடிய ஸ்கார்ப்பியோ கார் கடந்த 2002ம் ஆண்டு சந்தையில் அடியெடுத்து வைத்தது.
அதுமுதல் இன்று வரை ஸ்கார்ப்பியோ மவுசை குறைக்க புதிய எஸ்யூவி கார் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில், நடுத்தர மக்களின் ஆசையை தீர்க்கும் வகையில், ரூ.7.53 லட்சம் விலையில் புதிய ஸ்கார்ப்பியோ இஎக்ஸ் மாடலை மஹிந்திரா நேற்று அறிமுகம் செய்துள்ளது.
பார்த் ஸ்டேஜ்-3 மற்றும் பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் இரண்டு மாடல்களில் வரும் இந்த காரில் 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மஹிந்திராவின் 2.5 லிட்டர் எம்1சிஆர்டிஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
தவிர, அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த கார் லிட்டருக்கு 14 கிமீ செல்லும் என ஏஆர்ஏஐ சான்று தெரிவிக்கிறது. இந்த கார் 11.2 நொடிகளில் 60 கிமீ வேகத்தை கடக்க கூடியது. ராக்கி பெய்ஜ், டைமண்ட் ஒயிட், பியரி பிளாக் மற்றும் மிஸ்ட் சில்வர் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








