அறிமுகமாகி 2 நாளில் 6,000 மஹிந்திரா புதிய எஸ்யூவி புக்கிங்

Mahindra xuv500
இதுவரை எந்த எஸ்யூவி காருக்கும் கிடைக்காத ஒரு வரவேற்பை மஹிந்திரா எக்ஸ்யூவி-500 பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 2 நாளில் மஹிந்திராவின் புதிய குளோபல் எஸ்யூவி 6,000 புக்கிங்கை கடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சர்வதேச மார்க்கெட்டிற்கு செல்லும் வகையில் புதிய குளோபல் எஸ்யூவி காரை மஹிந்திரா கடந்த மாதம் 28ந் தேதி அறிமுகப்படுத்தியது. ரூ.15 லட்சத்தில் வரும் என்று ஆட்டோ வட்டாரங்கள் பரபரத்த நிலையில் ரூ10.80 லட்சம் என்ற விலையில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் கிடுகிடுக்க வைத்தது மஹிந்திரா.

எக்ஸ்யூவி-500 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவியில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், அட்டகாசமான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், அறிமுகமாகி முதல் 2 நாளில் மட்டும் 6,000 எக்ஸ்யூவி-500 புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த விலையில் தரமான கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் வந்துள்ள இந்த எஸ்யூவி விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டும் என்றும் கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 4, 2011, 10:45 [IST]
English summary
The much anticipated Mahindra XUV500 makes its global debut recently. Mahindra XUV500 getting good response from market due its lower price and greater features. Unconfirmed reports said that, Mahindra XUV500 bagged 6,000 bookings in just two days of its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+