தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: மாருதி தலைவர்

RC Bhargava
மானேசர்: "மானேசர் ஆலை தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் ஒரு அரசியல் பிரச்னை ; எனவே, ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி ஆலையை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது. நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே ஆலைக்குள் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மாருதி கூறிவிட்டது.

ஆனால், அந்த பத்திரத்தில் கையெழுத்திட முடியாது என கூறி மானேசர் ஆலை தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

இந்த நிலையில், மாருதியின் 30வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறியதாவது:

"தொழிலாளர்கள் எந்த உரிய காரணமும் இல்லாமல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் முழுக்க முழுக்க அரசியல் பிரச்னை.

எனவே, எங்களது நிறுவன கொள்கைகளை விட்டுக்கொடுத்து தொழிலாளர்களுடன் சமரசமாக செல்லும் பேச்சுக்கே இடமில்லை.

எங்கள் நிறுவனத்திற்கென்று வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீ்ர்வு காணமுடியும். இதை தொழிலாளர்களிடம் தெளிவாக கூறிவிட்டோம். எங்களது நிலையில் உறுதியாக இருக்கிறோம்.

இருப்பினும், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்," என்று கூறினார்.

தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக நேற்று வரை 8,550 கார்களின் உற்பத்தியில் இழப்பும், ரூ.425 கோடி வருவாய் இழப்பும் மாருதிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2011, 15:07 [IST]
English summary
Terming the labour problem at its Manesar plant as a “political issue”, car-maker Maruti Suzuki India on Thursday said it will not compromise on its established norms for industrial relations while attempting to resolve the disturbance. “My understanding is that the Manesar labour problem is essentially a political issue and not a problem which involves any significant demand from the workers,” Maruti Suzuki India (MSI) Chairman R.C. Bhargava said at the company’s 30th Annual General Meeting here. Since it is a political problem, its resolution will be based on Maruti’s established principles for industrial relations, he added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+