ஹோண்டா சிட்டியை ஓவர்டேக் செய்த வோக்ஸ்வேகன் வென்ட்டோ

Vento vs City
டெல்லி: கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் சந்தையில் ஆட்சி செய்து வந்த ஹோண்டா சிட்டியை ஓரங்கட்டியுள்ளது வோக்ஸ்வேகன் வென்ட்டோ.

சந்தையில் நீண்ட காலமாக இருக்கும் மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் செய்ய முடியாத மகத்தான சாதனையை அறிமுகப்படுத்தப்பட்டு 8 மாதங்களில் செய்துள்ளது வோக்ஸ்வேகன் வென்ட்டோ.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் 6,839 வென்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால்,ஹோண்டா நிறுவனம் வெறும் 4,315 சிட்டி கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

மிட்சைஸ் செடான் கார் என்றாலே, அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது ஹோண்டா சிட்டிதான். தரம், வடிவமைப்பு, ஜப்பானிய தொழில்நுட்பம் என அனைத்திலும் விஞ்சி நின்றதால், ஹோண்டா சிட்டியின் மார்க்கெட்டை உடைப்பது குறித்து மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

இந்த நிலையில், ஹோண்டா சிட்டி பிடித்து வைத்திருந்த உயர்ந்த இடத்தை அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களில் உடைத்துள்ளது வோக்ஸ்வேகன் வென்ட்டோ. இது வாடிக்கையாளர் மட்டுமின்றி ஆட்டோமொபைல் துறையினரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

வென்ட்டோவுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உலகின் நம்பிக்கைக்குரிய ஜெர்மன் கார் தொழில்நுட்பத்தை கொண்ட வென்ட்டோ காரின் பெட்ரோல் மாடல், ரூ.6.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா சிட்டி காரை ஒப்பிடும்போது அனைத்து நிகரில்லா அம்சங்களையும் பெற்றிருக்கும் வென்ட்டோ குறைந்த விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்களின் தேர்வில் சிட்டியை பின்னுக்குத் தள்ளி மனதில் எளிதாக இடம்பிடித்துவிடுகிறது வென்ட்டோ. ஹோண்டா சிட்டி மார்க்கெட்டை உடைத்தது குறித்து வோக்ஸ்வேகன் பெருமிதம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 21, 2011, 11:37 [IST]
English summary
In just eight months since launch, sales of the Vento have nudged ahead of those of the leader of 13 years for two months in a row now. VW managed to sell 6,839 Ventos in March and April; Honda could sell 4,315 Citys in that period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+