எத்தனை பேர் இருந்தால் என்ன! வாங்க ஆம்னியில போகலாம்...

பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடல்களில் கிடைக்கும் ஆம்னி, மாருதி சுஸுகியின் நம்பகத்தன்மைக்கு ஏற்ற வகையில் மைலேஜ் கொடுக்கிறது. வடிவமைப்பில் சிறியதாக தெரிந்தாலும், இருக்கையில் உட்காரும்போது தாராளமான இடவசதியை அளிக்கிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் பார்க்கிங் பிரச்சினைகளை மனதி்லிருந்து அகற்றும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆம்னி 5 மற்றும் 8 இருக்கைகள் மாடல்களில் கிடைக்கிறது. தவிர, வணிக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கார்கோ மாடலும் கிடைக்கிறது.
மாருதி ஆம்னியின் சிறப்பம்சங்கள்:
எஞ்சின்: 796cc , 3 cylinder வாட்டர் கூல்டு எஞ்சின்
திறன்: 35 Bhp @ 5000 rpm
டார்க்: 6.1 kgm @ 3000 rpm
கியர் பாக்ஸ்: 4 பார்வர்டு,1 ரிவர்ஸ் கியர்
டயர்கள்: 145R 12 LT 6PR ரேடியல்
வீல் பேஸ்: 1840 மிமீ
கிரவுண்டு கிளியரன்ஸ்:165மிமீ
வண்டியின் மொத்த எடை: 785 கிலோ
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 36லிட்டர்
குறைந்தபட்சம் 4.1 மீட்டர் சுற்றளவுக்குள் திருப்பும் திறன் கொண்ட ஸ்டீயரிங்
பிரேக்:
முன்பக்கம்:பூஸ்டர் அசிஸ்டடு டிஸ்க் பிரேக்
பின்பக்கம்: டிரம் பிரேக்
சஸ்பென்ஷன்:
முன்பக்கம்: மெக்பெர்சன் ஸ்டெர்ட்
பின்பக்கம்: லீப் ஸ்பிரிங் ஷாக்ஸ் அப்சார்பர்
மைலேஜ்: லிட்டருக்கு 14கி.மீ(சோதனைநிலைகளில்)
சென்னையில் ஆம்னியின் தோராய ஆன்ரோடு விலை:
BS-4 E MPI மாடல்:2,75 லட்சம்
BS-4 கார்கோ மாடல்: ரூ.2.52 லட்சம்
எல்பிஜி 5 இருக்கை மாடல்: ரூ.2.85 லட்சம்
எல்பிஜி கார்கோ மாடல்: ரூ.2.46 லட்சம்


Click it and Unblock the Notifications







