ஆளேடுக்கும் பணியை துவங்கியது மாருதி, ஸ்விப்ட் உற்பத்தி சீரடைகிறது

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையில் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நீடிக்கிறது. இப்பிரச்னையில் மாநில அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மாருதி ஆலை தொழிலாளர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தற்காலிக பணியாளர்களை கொண்டு கார் உற்பத்தியை நடத்தி வருகிறது மாருதி. இதனால், ஸ்விப்ட் கார் உற்பத்தி வழக்கமான அளவை எட்டியுள்ளதாகவும், நேற்று மட்டும் 500 ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட அளவு ஸ்விப்ட் கார்கள் குர்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பதில் புதிதாக நிரந்தர தொழிலாளர்களை நியமிக்கும் பணியை மாருதி இன்று துவங்கியுள்ளது. ஏற்கனவே, பயிற்சி பெற்ற 50 புதிய தொழிலாளர்களை மாருதி நிரந்தரமாக பணியமர்த்தியுள்ளது.
இந்த நிலையில், 100 நிரந்தர தொழிலாளர்களை இன்று மாருதி நியமிக்க உள்ளது. இதனால், ஸ்விப்ட் உற்பத்தி விரைவில் சீரடையும் என்று மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








