ஒரே ஆண்டில் 10லட்சம் கார்களை விற்று மாருதி சுஸுகி சாதனை!

Maruti Growth
டெல்லி: ஒரே நிதி ஆண்டில் 10 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாருதி சுஸுகி இந்தியா.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் 10 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்து இந்தப் புதிய பெருமையைப் பெற்றுள்ளது மாருதி.

கார் உற்பத்தி நிறுவனங்களில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக மாருதி சுசுகி இந்தியா திகழ்கிறது.இந்திய கார் விற்பனை சந்தையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது மாருதி.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் புகழ்பெற்ற கார்நிறுவனமாகத் திகழ்கிறது மாருதி சுஸுகி. இந்திய கார் சந்தையில் 50 சதவீதத்துக்கும் மேல் மாருதிதான் ஆட்சி செலுத்துகிறது. விற்பனையில் பல மைல் கற்களை எட்டியுள்ள இந்த நிறுவனம், இந்த நிதியாண்டு முடிவதற்குள்ளாகவே 10 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"2009-10ம் ஆண்டுக்குட்பட்ட கடந்த நிதி ஆண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 10,18,365 கார்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஒரே நிதி ஆண்டில் 10 லட்சம் கார்களை விற்ற இந்தியாவின் முதல் கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமை கிடைத்துள்ளது. இது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதேபோன்று,நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில், இந்த மாத ஏற்றுமதியை தவிர்த்து (ஏப்ரல்-ஜனவரி) இதுவரை 10,01,529 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த புதிய சாதனையையும் படைத்துள்ளோம். மேலும்,கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உள்நாட்டு கார் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

விற்பனை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரியானாவி்லுள்ள மானேசரில் மேலும் இரண்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1700 கோடி செலவில் அமைக்கப்படும் தொழிற்சாலை அடுத்த ஆண்டு ஜனவரியில் உற்பத்தியைத் துவங்கும்.

ரூ.1925 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு தொழிற்சாலை வரும் 2013ம் ஆண்டு துவக்கத்தில் செயல்படத் துவங்கும். புதிதாத அமைக்கப்படும் இரண்டு தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 29, 2011, 17:59 [IST]
English summary
The country's largest carmaker Maruti Suzuki India, which became the first company in India to sell one million units in a single year last fiscal, has already crossed the milestone in just ten months this financial year.Cumulatively, without the January export figures, MSI's total sales in the April-January period stands at 10,01,529 units. At present, MSI contributes over 50% to parent Suzuki Motor Corp's total global sales volume. In 2009-10 fiscal, MSI's total sales stood at 10,18,365 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+