ரூ.10லட்சம் பரிசுப் போட்டி: மாருதி சுசுகி அறிவி்ப்பு

சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளித்து விற்பனையை பெருக்க, மாருதி சுசுகி கார் நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்றாக, தேர்வுடன் கூடிய புதுமையான பரிசு போட்டியை மாருதி நிறுவனம் கடந்த ஆண்டுஅறிவித்தது.
கார் விற்பனையை பெருக்குவது குறித்த சந்தை யுக்திகளை தெரிவிக்கும் வகையில் இந்த போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் மதிப்புமிக்க யோசனைகளை தெரிவி்த்த போட்டியாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில்,பலத்த வரவேற்பை பெற்ற அந்த பரிசுப்போட்டியை மாருதி நிறுவனம் மீண்டும் அறிவித்துள்ளது .'வேகன்ஆர் பிக் சேலஞ்ச் 2'என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து மாருதி நிறுவன விற்பனைப்பிரிவு தலைமை பொது மேலாளர் கூறியதாவது:
இந்த பரிசுப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். மார்க்கெட்டிங் தொடர்பான யுக்திகளை போட்டியாளர்கள் தேர்வில் தெரிவிக்க வேண்டும். மேலும்,கார் விற்பனை நிறுவனங்களை அணுகி தாங்கள் தெரிவித்த மார்க்கெட்டிங் யுக்திகளை சிறப்பாக செயல்படுத்தி காட்ட வேண்டும்.
தனித்திறன் அடிப்படையில் பயனுள்ள விற்பனை யுக்திகளை தெரிவித்த போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு,ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும்,மாருதி வேகன் ஆர் காரும் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெற்ற போட்டியாளர் தெரிவித்த கருத்துக்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் கொள்கைகளில் பயன்படுத்தப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications








