மாருதி சுசுகி நிறுவனத்தின் நிகர லாபம் 18சதவீதம் சரிவு!

By
Maruti Sales
மும்பை: நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டபோதும்,நிகர லாபம் 18 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலண்டில் 2,58,026 ஆக இருந்த மாருதி சுசுகி நிறுவனத்தின் மொத்த கார் விற்பனை,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்28.16 சதவீதம் உயர்ந்து,3,30,687 கார்கள் விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது.

இதேபோன்று,கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.7333.77கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 26.49சதவீதம் அதிகரித்து,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.9276.73 கோடியாக உயர்ந்தது.

கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டபோதிலும், கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு, அன்னிய பண மாற்று வர்த்தகத்தின் நிலையில்லா தன்மை, கூடுதல் ராயல்டி போன்றவற்றால் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 17.80 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ரூ.687.53 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டில் ரூ.565.17 கோடியாக குறைந்துவிட்டது என மாருதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2011, 11:14 [IST]
English summary
The outcome of the 2010 calendar year for Maruti Suzuki is not a pleasant one during theQ3 when its net profit faced a fall by 18%. The amount accrued by way of business amidst these constraints stood at Rs565.17 crore against Rs687.53 crore achieved during the same period of the previous year. Quite interestingly the sale figure was not that much humiliating as it was up by 26.49% yielding Rs9276.73 crore against Rs7333.77 crore for the corresponding period of 2009.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+