ஃபியட் டீசல் எஞ்சின் சப்ளை ஒப்பந்தத்தை இறுதி செய்த மாருதி

விண்ணை முட்டும் பெட்ரோல் விலையால் இந்தியாவில் டீசல் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டீசல் கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும், விற்பனையிலும் அனைத்து கார் நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி வசம் டீசல் கார் மாடல்கள் இருந்தாலும், தேவையை சமாளிக்கும் வகையில் டீசல் எஞ்சின் உற்பத்தி திறன் அந்த நிறுவனத்திடம் இல்லை. இதற்காக, ஃபியட் நிறுவனத்திடம் இருந்து டீசல் எஞ்சின்களை பெறுவதற்கு அணுகியது.
இதுதொடர்பாக, இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிந்தன. இந்த நிலையில், ஃபியட்டிடமிருந்து டீசல் எஞ்சின் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மாருதி இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் டீசல் எஞ்சின்களை ஃபியட் நிறுவனம் மாருதிக்கு சப்ளை செய்யும்.
இதையடுத்து, அடுத்த ஆண்டில் ஸ்விப்ட் கார் உற்ப்த்தியை கணிசமாக உயர்த்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மார்க்கெட் தேவையை சமாளிக்க முடியும் என்று மாருதி நிறுவனம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








