மாருதி கார்கள் விலை ரூ 8000 வரை திடீர் உயர்வு!

பல்வேறு நிறுவனங்களும் சத்தமில்லாமல் கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.
மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தக் கூடும் என்று ஜனவரி 17-ம் தேதி கூறப்பட்டது. இப்போது ரூ 1000 முதல் 8000 வரை விலைகளை உயர்த்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோ கே 10 மாடலுக்கு மட்டும் விலை உயரவில்லை.
ரப்பர், இரும்பு, ஸ்டீல் மற்றும் தாமிரத்தின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டதால், அதைச்ம சமாளிக்க இந்த விலை உயர்வு அவசியமாகிவிட்டது என அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் மயங்க் பரீக் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








