கிசாஷி சொகுசு காரை பிரபலபடுத்த ரூ.8கோடி செலவிடும் மாருதி!

Maruti Suzuki Kizashi
டெல்லி: கிசாஷி சொகுசு காரை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பர பிரச்சாரங்களுக்காக ரூ.8 கோடியை மாருதி சுஸுகி செலவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி முதன்முறையாக உயர் ரகத்தை சேர்ந்த கிசாஷி சொகுசு காரை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கார் வரும் 10ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விளம்பரங்களின் மூலம் கிசாஷியை பிரபலபடுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கிசாஷி விளம்பரங்களுக்காக ரூ.8 கோடியை மாருதிசெலவிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,ரூ.7கோடி டிவி விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடப்பட உள்ளது. இதற்காக, புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் எடுக்கப்பட்டு்ள்ள விளம்பரம் அடுத்த வாரம் முதல் டிவிக்களில் ஒளிபரப்பாகும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே நிருபர்களிடம் பேசிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி கூறுகையில்,"கிசாஷி மூலம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் 50 சதவீத இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளோம். ஆண்டுக்கு 55,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 8, 2011, 12:22 [IST]
English summary
Having announced its entry into the luxury car segment with 'Kizashi', Maruti Suzuki India is now kicking off a promotional campaign for the sedan starting with the ongoing cricket World Cup. According to industry sources, Maruti Suzuki India (MSI) is likely to spend up to Rs 8 crore on the entire campaign on Kizashi, out of which between Rs 5 crore to Rs 7 crore alone would be utilised for TV commercials during the ongoing cricket World Cup.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+