அனைத்து கார்களிலும் சி.என்.ஜி. கிட் பொருத்த மாருதி திட்டம்

Maruti Wagon R
டெல்லி: தனது அனைத்து கார்களிலும் சி.என்.ஜி. கிட்டை பொருத்தி அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

சந்தையில் 11 கார் மாடல்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. இதில் ஆல்ட்டோ, வேகன் ஆர், எஸ்டிலோ, ஈக்கோ, எஸ்எக்ஸ்-4 ஆகிய 5 கார்களில் கடந்த ஆண்டு சி.என்.ஜி. கிட் பொருத்தப்பட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

சி.என்.ஜி. கிட் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மீதமுள்ள கார்களிலும் சி.என்.ஜி. கிட்டை பொருத்தி அறிமுகம் செய்ய உள்ளது மாருதி.

இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் எங்களது சி.என்.ஜி. மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சி.என்.ஜி. நிரப்பும் நிலையங்கள் எண்ணிக்கையை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சி.என்.ஜி. மாடல்களை அறிமுகப்படு்தத திட்டமிட்டுள்ளோம்.

குஜராத்தில் சி.என்.ஜி. மாடல் கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. எங்களது மொத்த விற்பனையில் 10 சதவீதம் அளவிற்கு சி.என்.ஜி. கார்கள் விற்பனையாகிறது. எனவே, எங்களது அனைத்து மாடல் கார்களிலும் சி.என்.ஜி. கிட்டை பொருத்தி அறிமுகம் செய்ய திட்டமி்ட்டுள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 1, 2011, 11:54 [IST]
English summary
After rolling out five compressed natural gas (CNG) models last year, India’s largest passenger car maker, Maruti Suzuki India Ltd (MSIL), is mulling a CNG platform for all its makes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+