வரும் ஜனவரியில் எர்டிகா எம்பிவியை களமிறக்க மாருதி திட்டம்

Maruti Ertiga
7 பேர் பயணம் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எம்பிவி காரை வரும் ஜனவரியில் மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக திகழும் மாருதி நிறுவனம், மொத்த கார் விற்பனையில் பாதி இடத்தை பிடித்து வைத்துள்ளது. வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு வினாடியும் ஒரு காரை விற்பனை செய்யும் இந்திய கார் நிறுவனம் என்ற பெருமையும் மாருதிக்கு கிடைக்க உள்ளதாக கணி்ப்புகள் தெரிவிக்கின்றன.

ரக ரகமாய் சிறிய கார்களை கைவசம் வைத்துள்ள அந்த நிறுவனம், எம்பிவி ரகத்தில் ஒரு கார் மாடலை கூட வைத்திருக்கவில்லை. இந்த குறையை போக்கும் விதத்தில் புதிய எம்பிவி காரை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

7 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் ஆர்-3 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எம்பிவிக்கு தற்போது எர்டிகா என்று பெயரிடப்பட்டுள்ளதாக மாருதி வட்டார தகவல்கள் தெரிவி்க்கின்றன.

ரூ.6லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் வரும் ஜனவரியில் இந்த புதிய எம்பிவியை அறிமுகப்படுத்த உள்ளதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. எஸ்எக்ஸ்-4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எம்பிவியிலும் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், எர்டிகாவை மாருதி ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சத்தில் அறிமுகம் செய்தால் அது எம்பிவி செக்மெண்ட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டொயோட்டோ இன்னோவாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 15, 2011, 15:45 [IST]
English summary
Country's largest car maker Maruti all set to launch of its brand new MPV christined Ertiga coming January. The 7 seater MPV will equipped with 1.3 liter diesel engine and expected a Rs.6 lakhs to 9 lakhs price tag.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+